Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

-

செந்தில் பாலாஜி வழக்கு 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Highcourt

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதுதொடர்பான விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “2014-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. அதன் பிறகே செந்தில் பாலாஜிக்கு அமலாக்கப்பிரிவு 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது, அதன்படி செந்தில்பாலாஜி சார்பில் ஆடிட்டர் நான்கு முறை ஆஜராகி விளக்கமளித்தார். அதன் பின் ஒரு நாள் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- ஜூன் 28 வரை நீதிமன்றக் காவல்!
File Photo

சட்டத்தின்படி, அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 24 மணிநேர காவலில் வைக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்படுகிறது, இது ஏற்கனவே மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்களுக்கு பிறகு காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு எந்த வித சட்டபூர்வ அதிகாரமும் இல்லை, எனவே மருத்துவனை சிகிச்சை நாட்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற சட்டப்பிரிவை அமலாக்கத்துறை பின்பற்ற வேண்டும். குற்ற விசாரணை முறை சட்டம் அமலாக்கபிரிவுக்கு பொருந்தாது என எந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இல்லை. குற்ற விசாரணை முறைச் சட்ட பிரிவை பின்பற்றாதது அடிப்படை உரிமை மீறல்” என வாதிட்டார்.

செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?
ஸ்டாலின் செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜி தரப்பின் வாதம் இன்று நிறைவடைந்த நிலையில் பதில் வாதத்துக்கு அமலாக்கத்துறை அவகாசம் கேட்டதால் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை ஜூன் 27 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

MUST READ