செந்தில் பாலாஜியின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!
கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் 14- ஆம் தேதி அன்று சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சுமார் 10 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
‘இந்தியன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா…… இந்த தேதியில் தான்!
அதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜி வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வழக்கின் விசாரணையின் போது, மனு தள்ளுபடியா? அல்லது ஏற்பா? என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.