
அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 26) மதியம் நடைபெற்றது.
பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல், “அமலாக்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அவர்களால் எப்படி கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அமலாக்கத்துறையால் நேரடியாக கைது செய்து விசாரணை நடத்த முடியுமா? சுங்கத்துறை எனப்படும் கஸ்டம்ஸ் அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியாது; காவல்துறையினரிடம் தான் ஒப்படைக்க முடியும்.
ஒருவரிடம் விசாரணை நடத்தி அவரிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக பயன்படுத்த முடியும்” என்று வாதிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து காரசாரமாக வாதம் நடைபெற்று வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (ஜூலை 25) முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.