Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 23- வது முறையாக நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 23- வது முறையாக நீட்டிப்பு!

-

- Advertisement -

 

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 23- வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜூ முருகன் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா… கமிட்டான இளம் நடிகர்…

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறையில் இருந்து காணொளியாக வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

தோனியை சந்தித்து பேசிய அட்லீ… என்னவாக இருக்கும்?

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை என்று குறிப்பிட்டுள்ள மனுவைத் தாக்கல் செய்தார். மேலும், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 06- ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 23- வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

MUST READ