Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 25ஆவது முறையாக நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 25ஆவது முறையாக நீட்டிப்பு!

-

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 25ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்யா – சாயிஷா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து… அன்பு மழையில் தம்பதி…

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 9 மாத காலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியாகினர்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி, புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

425 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’?

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 13- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 25ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ