Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் டிச.04 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் டிச.04 வரை நீட்டிப்பு!

-

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் டிசம்பர் 04- ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘நவ.26- ஆம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்’ என அறிவிப்பு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்திருந்தனர்.

இதையடுத்து, டெல்லியிலுள்ள உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் சூழலில், உடல்நலக்குறைவுக் காரணமாக, சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மருத்துவமனையில் இருந்தவாறு காணொளி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காவல்துறை ஆஜர்ப்படுத்தியது.

தி.மு.க. மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் டிசம்பர் 04- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றனர்.

MUST READ