Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் காவல் 33-வது முறையாக நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் காவல் 33-வது முறையாக நீட்டிப்பு!

-

- Advertisement -

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33- வது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்… இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்…

தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி, கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அன்று சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை சென்னை முதன்மை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த சூழலில், நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அடுத்தடுத்து பட தோல்வி… அதிரடி மாற்றங்கள் செய்த விஜய் தேவரகொண்டா…

இதையடுத்து, வரும் ஏப்ரல் 22- ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33- வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ