Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிப்பு!

-

- Advertisement -

 

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 9வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகைக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை உறுதி!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறையும், அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு, அவரது சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழந்தால் ரூபாய் 30 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (அக்.20) முடிவடையவிருந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு, வரும் நவம்பர் 06- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை 9வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ