
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மூன்றாவது முறையாக நீட்டித்தது நீதிமன்றம்.
நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருகிறது- என்எல்சி
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, நீதிமன்றத்தின் அனுமதியுடன், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர், காவல்துறையினரிடம் ஒபபடைத்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், அவரது நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…
கடந்த ஜூன் 14- ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், அவரது காவல் மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.