செந்தில் பாலாஜி தலையில் காயம்- மனித உரிமைகள் ஆணையம்
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமைகள் மீறல் நடந்ததா? என ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை நடத்தினார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே நெஞ்சுவலி ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நேரில் சந்தித்து மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், “அமலாக்கத்துறை விசாரணையின்போது துன்புறத்தப்பட்டது உண்மை. தலையில் காயம் உள்ளது. சோர்வாக காணப்பட்டார். விசாரணைக்கு ஒத்துழைத்தும், தன்னை மோசமாக அமலாக்கத்துறை நடத்தியதாக செந்தில் பாலாஜி சொன்னார். அமலாக்கத்துறையால் கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கைது செய்தபோது தர தரவென இழுத்துச் சென்றதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். செந்தில் பாலாஜியின் தலையில் காயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” எனக் கூறினார்.