Homeசெய்திகள்தமிழ்நாடு"செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை"- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

-

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனிடையே, காவேரி மருத்துவமனையில் அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்ற நிலையில், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

லியோ பட பாடல் விவகாரம் – நடிகர் விஜய்க்கு நோட்டீஸ்

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறைச் சார்பில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, “அமைச்சர் செந்தில் பாலாஜி ஆரம்பத்தில் இருந்தே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அழைப்பாணை அனுப்பினாலும் உரிய பதில் தரவில்லை; கேட்கின்றக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரிய மனுவில் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரிய மனு செந்தில் பாலாஜி தரப்புக்கும் வழங்கப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டுமென்ற விதி பொருந்தாது. குற்ற விசாரணை முறைச் சட்டத்தில் கைது செய்ய வழங்கியுள்ள அதிகாரத்துக்கு பெரிய வித்தியாசம் உள்ளது. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதற்கு ஆதாரம் உள்ளது. ஆதாரங்கள் இருப்பதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

பவண் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகும் வினோதய சித்தம்… வெளியான மாஸ் போஸ்டர்!

கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் அது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது. கைதுக்கான ஆதாரங்களை செந்தில் பாலாஜி பெற மறுத்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன. எனவே, அவரின் கைதைச் சட்ட விரோதம் எனக் கூற முடியாது. நீதிமன்ற காவல் ஆணை பிறப்பிக்கும் முன் ஆட்கொணர்வு மனு தாக்கலானதால் கைது சட்டவிரோதம் இல்லை. நீதிமன்றக் காவலில் வைக்கக்கோரிய மனு 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டது” என்று வாதிட்டார்.

MUST READ