Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி இன்று காணொலியில் ஆஜராக வாய்ப்பு

செந்தில் பாலாஜி இன்று காணொலியில் ஆஜராக வாய்ப்பு

-

செந்தில் பாலாஜி இன்று காணொலியில் ஆஜராக வாய்ப்பு

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எழுந்து நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

senthil balaji

 

சட்டவிரோதப் பணிப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்ஜியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தால்.... அரசின் முன்னுள்ள வாய்ப்புகள்!
File Photo

இந்நிலையில் செந்தில் பாலாஜியால் தற்போது பேச முடிவதுடன் தானாகவே அமரவும் முடிவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எழுந்து நடக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற காவல் இன்றுடன் முடியும் நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி இன்று ஆஜராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது..

 

MUST READ