Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

-

 

senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

“செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

சட்டவிரோதப் பணிப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்ஜியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

“பட்டமளிப்பு விழாவில் பங்கேற்போர் கருப்பு உடை அணியத் தடையில்லை”- பெரியார் பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இந்த நிலையில், அமலாக்கத்துறை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல், எழுத்துப் பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய்ய இரு தரப்புக்கும் நாளை (ஜூன் 28) வரை அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

MUST READ