Homeசெய்திகள்தமிழ்நாடு"செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?"- இன்று தீர்ப்பு!

“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!

-

 

துறை ஏதுவும் இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.05) தீர்ப்பளிக்கிறது.

“நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒரு அமைச்சராக நீடிக்க எந்த தகுதி இழப்பும் இல்லை; குற்றச்சாட்டுப் பதிவுச் செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க சட்டம் தடைச் செய்யவில்லை என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

ஆறு மாநிலங்களில் ஏழு பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஆளுநர் சட்ட விதிகளின் படியே செயல்பட்டிருக்கிறார் என்றும், சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியால் அரசுப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்பதால், அவர் அமைச்சராக நீடிக்க முடியுமா? என எதிர்தரப்பினர் வாதங்களை முன் வைத்தனர்.

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று (செப்.05) தீர்ப்பளிக்கிறது.

MUST READ