Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

-

 

சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
Video Crop Image

அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கீழமை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும் செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி வசம் இருந்த இலாகாக்கள் அமைச்சர் முத்துசாமி, தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத அமைச்சராக பல மாதங்கள் இருந்து வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த சூழலில், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த தீவிர ரசிகர்… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா…

இதனிடையே, தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தேடப்பட்டு வரும் நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் தான அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ