Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

-

 

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

செந்தில் பாலாஜி தொடர்ந்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கை வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்படும் என நீதிபதி ரமேஷ், சுந்தர் மோகன் தெரிவித்துள்ளனர்.

மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!

இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிடில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விடும் என்று வாதிட்டும் அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மற்றொரு மனு வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் முறையீட்டை ஏற்று பிப்ரவரி 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

MUST READ