செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக விசாரணை
அமலாக்கத் துறை காவலில் எடுக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார்.இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் அதிகாரிகள் சில மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். செந்தில் பாலாஜியிடம் கேட்க 150 கேள்விகளை தயார் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் துப்பாக்கி ஏந்திய 10-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.