Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் -செந்தில் பாலாஜி தரப்பு...

செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் -செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு

-

- Advertisement -

செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் -செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியுள்ளது.

திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்கவோ, சந்தித்துப் பேசவோ கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

இதுகுறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வெவ்வேறானவை என்றார்.

செந்தில் பாலாஜி பிணையில் வந்தது தியாகமா? – சீமான்

மேலும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகள்:

  1.  ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்த தடையும், கட்டுப்பாடும் இல்லை.
  2. திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
  3.  சாட்சிகளை கலைக்கவோ, அவர்களை சந்தித்துப் பேசவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது.
  4. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணை கைதியாகவே இருப்பதால், அவருடைய அடிப்படை உரிமையைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.
  5. ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்தரவாதம் வழங்க வேண்டும்.
  6.  விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  7.  வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது, என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

மேலும் செந்தில் பாலாஜி இன்று வெளியே வரக் கூடாது என்று முடிவு செய்துவிட்டதை போல் நீதிபதி செயல்படுவதாகவும், நீதிபதியின் முடிவு புதிய நடைமுறையாக உள்ளது என்றும் நீதிபதியின் முடிவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

MUST READ