செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொலியில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்க துறை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக காணொலியில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வயநாடு நிலச்சரிவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் – முத்தரசன் அறிவிப்பு
படுக்கையில் படுத்திருந்தவாறு ஆஜர்படுத்தப்பட்டதால் என்ன ஆனது ? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சிறை காவலர் விளக்கம் அளித்துள்ளார். 52 வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.