Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

-

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட 15 நாள் நீதிமன்ற காவல் உத்தரவை ரத்து செய்யக் கோரி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

senthil balaji

மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.அமைச்சருக்கு மேற்கொண்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் இருதயத்தில் மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையைச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

senthilbalaji

செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை திரும்பப் பெறக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றக் காவல் ஏற்கனவே வழங்கப்பட்டதால் மனு செல்லத்தக்கதல்ல எனக் கூறி மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் புழல் சிறை அதிகாரிகள் குவிந்துள்ளனர்.

MUST READ