இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சூரி நடிப்பில் உருவாகும் ‘கருடன்’ படத்தின் முக்கிய அப்டேட்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது குறித்து பற்றி முதலமைச்சரே முடிவுச் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!
இந்த வழக்கு இன்று (ஜன.05) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியானதே; இதில் தடையிடத் தேவையில்லை” என்று தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.