Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26வது முறையாக நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26வது முறையாக நீட்டிப்பு!

-

senthilbalaji

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26வது முறையாக நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை வழக்கில் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 9 மாத காலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியாகின. இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26வது முறையாக நீட்டித்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 18 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

MUST READ