செந்தில்பாலாஜி உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்.
சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகின்றனர். தனலட்சுமி மார்பிள் விற்பனை நிலையம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மத்திய துணை ராணுவ வீரர்கள் உதவியுடன் கரூரில் 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். இதேபோல் கோவை ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கண்காணிப்பாளர் முத்துபாலனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார். செங்குந்தபுரத்தில் உள்ள நிதி நிறுவனம் மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் சோதனை செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டார்.