Homeசெய்திகள்தமிழ்நாடுமீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம் : விஜய் வசந்த் எம். பி...

மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம் : விஜய் வசந்த் எம். பி கோரிக்கை

-

மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கு தனி அமைச்சரகம் : விஜய் வசந்த் எம். பி கோரிக்கை

மீனவர்களின் நலன் மற்றும் மீன்வள துறையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாக ஒரு அமைச்சரவை தேவை என கோரி பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் .

மீனவர்கள் இன்று பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள். கடலில் மீன்பிடிக்க செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள், வேறு நாட்டு அரசுகள் மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல்கள், புயல் மற்றும் பெருங் காற்றினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏராளம். இலங்கை, பாகிஸ்தான் போன்ற வெளிநாட்டு சிறைகளில் நமது மீனவர்கள் அல்லல் படுகின்றனர். தற்போது 211 இந்திய மீனவர்கள் மற்றும் 1172 படகுகள் பாகிஸ்தான் நாட்டிலும், 141 மீனவர்கள் மற்றும் 198 படகுகள் இலங்கையிலும், 95 மீனவர்கள் வங்கதேசத்திலும் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் கடலரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களால் கடலோர கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

கடலில் குறைந்து வரும் கடல் வளங்கள் காரணமாக மீன்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்தியாவில் 7516 கி. மீ தூரத்திற்கு கடற்கரையும் அதில் சுமார் 3 கோடி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் நலனை பாதுகாக்கவும், மீன் வளத்தை பெருக்கவும் உதவும் வகையில் மத்திய அரசு மீனவர் நலன் மற்றும் மீன்வள துறைக்கென தனி அமைச்சரகம் உருவாக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்

 

MUST READ