தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 17ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக முன்கூட்டியே மது குடிகளுக்கு விடுமுறை வழங்கிய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கலெக்டர் சங்கீதா அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் உத்தரவை மீறி மதுக்கடைகள் திறப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் ஜகடே எச்சரித்துள்ளார்.