Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை... தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை… தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!

-

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற என்.சி.சி முகாமில் பங்கேற்ற 12 வயது சிறுமிக்கு, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் சிவராமன், தனியார் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் சிவராமனுக்கு செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

'பெங்களூரு குண்டுவெடிப்பு'- தமிழகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவு!

இந்த நிலையில், கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நியாயமான விசாரணை நடத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார். மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 3 நாட்களுக்குள் காவல்துறை மற்றும் மாநில அரசிடம் இருந்து விரிவான அறிக்கை அளிக்கவும் கேட்டுக்கொண்டு உள்ளது.

 

 

 

 

 

MUST READ