Homeசெய்திகள்தமிழ்நாடுஎஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!

எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!

-

 

எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!
Photo: SG Surya

அவதூறு புகாரில் கைதுச் செய்யப்பட்ட பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விஜயின் பேச்சை பாராட்டிய இயக்குனர் கரு பழனியப்பன்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். இது குறித்த புகாரின் அடிப்படையில், சூர்யாவை சென்னையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, மதுரை அழைத்துச் சென்ற அவரை மாவட்ட நீதிபதி ராம்சங்கரன் முன்பாக காவல்துறையினர் ஆஜர்படுத்திய நிலையில், 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விமர்சனங்களை தாண்டி வசூலில் சாதிக்கும் ஆதிபுருஷ்!

எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ