Homeசெய்திகள்தமிழ்நாடுஎஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல்

எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல்

-

எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல்

பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு ஜூலை 1-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது... காவல்துறை அதிரடி- காரணம்  இதுதான்...

மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் இரு பிரிவினரிடையே மோதலை தூண்டும் வகையில கடந்த 7-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி கடந்த 12ஆம் தேதியன்று முன்பாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன் மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர சைபர்கிரைம் காவல்துறையினர், சென்னையில் வைத்து பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவை நேற்றிரவு கைது செய்தனர். இதனையடுத்து இன்று காலை சூர்யாவை ரேஸ்கோர்ஸ் காலனி நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து 3 மணி நேரமாக இரு தரப்பினரும் வாதங்களை எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து வாதங்களை கேட்டறிந்த நீதிபதி சூர்யாவை ஜூலை 1 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சூர்யாவை மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

MUST READ