Homeசெய்திகள்தமிழ்நாடுநாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியது

நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கியது

-

- Advertisement -

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது

இந்தியா – இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் இயக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஒரு சில நாட்களிலேய கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் சேவை இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

நாகப்பட்டினம்- காங்கேசன்துறை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு!
Video Crop Image

இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சோதனை ஓட்டம் சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. கப்பல் போக்குவரத்தை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், நாகை ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் நாளில் இந்த கப்பலில் 44 பேர் பயணம் மேற்கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

இதனிடையே நாகையிலிருந்து புறப்பட்ட சிவகங்கை கப்பல் காங்கேசன் துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடைந்த நிலையில், நாளை காலை 10 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும். தொடர்ந்து, ஆக. 18ம் தேதி காலை 8 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும் சிவகங்கை கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். அதே நாள் மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை வந்தடையும். இதைத்தொடர்ந்து இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் சேவை நடைபெறும்.

 

MUST READ