Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

-

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளுக்கு ஈடாக தனி கட் ஆப் மார்க் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை 2213 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில் அம்மாவட்டத்தில் தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கு இரண்டு வகையான வினாத்தாள்கள் கொடுத்ததால் மாணவ மாணவியர் குழப்பமடைந்தனர்.

கொடுக்கப்பட்ட வினாத்தாள்களில் 200 வினாக்களும் வேறுபட்டு இருந்ததால் தேர்வு முடித்து வெளியே வந்த மாணவ மாணவியருக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

அதில் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் முறையாக பேச்சு வார்த்தை நடத்தி தூத்துக்குடியில் மாறுபட்ட வினாத்தாளுக்கு தனியாக கட் ஆப் மார்க் வழங்க வேண்டும் என மாணவ மாணவியர் கோரிக்கை விடத்துள்ளனர்.

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை – உயர் கல்வி அமைச்சகம் (apcnewstamil.com)

ஏற்கனவே நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேசிய அளவில் மிகப்பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில் தற்போது வினாத்தாள் குளறுபடிகளால் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

MUST READ