Homeசெய்திகள்தமிழ்நாடுபேர்ணாம்பட்டில் ஆடு மேய்த்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - போலீசார் விசாரணை!

பேர்ணாம்பட்டில் ஆடு மேய்த்த விவசாயி மீது துப்பாக்கிச்சூடு – போலீசார் விசாரணை!

-

- Advertisement -

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஆடு மேய்த்துகொண்டிருந்த விவசாயி படுகாயம் அடைந்தார்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஓனான்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி(55). இவர் இன்று ஓனான்குட்டை காப்புகாடு பகுதியில் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கே மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ராமசாமியின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது.

இதனால் வலி தாங்க முடியாமல் ராமசாமி அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேர்ணாம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

MUST READ