Homeசெய்திகள்தமிழ்நாடுசிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தி.மு.க.வில் சேர்ப்பு!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தி.மு.க.வில் சேர்ப்பு!

-

 

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தி.மு.க.வில் சேர்ப்பு!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவதாக அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோலிவுட் ரசிகர்களுக்கு காதலர் தின பரிசு… 96 படம் மறுவெளியீடு…

தி.மு.க.வின் தலைமை பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டம் ஒன்றில், பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ குறித்து அவதூறாகப் பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரை கட்சியில் இருந்து நீக்கி தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்திருந்தது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைதும் செய்திருந்தனர்.

இந்த நிலையில்,இன்று (பிப்.11) தி.மு.க,வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்றிட அனுமத்தி அளிக்குமாறு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துச் செய்யப்பட்டு இன்று முதல் தி.மு.க.வின் உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகுமாரியாக திவ்யபாரதி… தி கோட் படப்பிடிப்பு புகைப்படம் வைரல்…

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வருகையை, ‘I Am Back’ என பதிவிட்டு தி.மு.க.வினர் சமூகவலைத்தளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ