Homeசெய்திகள்தமிழ்நாடுடி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்

-

டி.என்.பி.எஸ்.சி தலைவராக வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள  எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்தமிழக அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், டி.என்.பி.எஸ்.சி சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகால அட்டவணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள், நேர்காணல்கள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பல மாதங்களாக டிஎன்பிஎஸ்சியில் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதன்படி 2022 முதல் டி.என்.பி.எஸ்.சி யில் தலைவர் பதவி காலியாக உள்ளது.

இந்நிலையில் TNPSC புதிய தலைவராக எஸ்.கே. பிரபாகரை   நியமனம் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எஸ்.கே. பிரபாகர் .1989-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.  சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஆகும்.

இவர் அரசின் பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக இருந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது முதலமைச்சரின் செயலாளர் 4 ஆக இருந்தார்.

டாப் 10 கல்லூரி பட்டியலில் இடம் பிடித்த சென்னை அரசு மருத்துவ கல்லூரி

தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் , வணிகவரித்துறை செயலாளர் மற்றும் ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர், உள்துறை, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

இவர் பொறியியல் முதுகலை பட்டம் பயின்று பின்னர் சிவில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆனார். 1966-ம் ஆண்டு பிறந்த இவர்  62 வயது நிறைவு அல்லது அல்லது 6 ஆண்டுகள் வரை இந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ