Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம்...

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

-

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டண உயர்வு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்புகள் இணைந்து முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லும் விதமாக 25.09.2023 அன்று ஒரு நாள் அடையாள கதவு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

இதனை கருத்தில் கொண்டு AIEMA மற்றும் சென்னையை சுற்றியுள்ள அனைத்து தொழில் கூட்டமைப்புகளும் இணைந்து 25.09.2023 அன்று கதைவடைக்கவுள்ளார்கள்.

சனாதன பேச்சு விவகாரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இந்த கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் அனைத்து வகை தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு வருட காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் ஜூலை 2023 முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் தொழில் நிறுவனங்கள் வெகு விரைவில் மூடும் அபாயம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு ஒரு நாள் கதவு அடைப்பு செய்ய உள்ளோம்.

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

தமிழக அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று எண்ணி எங்களுடைய ஏழு அம்ச கோரிக்கையை முன்வைக்கிறோம்.

தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் மின்கட்டண உயர்வு குறித்த கோரிக்கைகள்

தமிழகம் தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் தொழில் வளர்ச்சியை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதிலும் நமது தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இது வேலைக்கு ஆகாது போலயே… கடைசி நேரத்தில் அதிரடி முடிவெடுத்த சந்திரமுகி 2 படக்குழுவினர்!

1.குடிசை மற்றும் குறு மின் நுகர்வோருக்கு (12 KW Load) Tariff III A (1) மின் இணைப்பு அளிக்கப்பட வேண்டும்,

  1. தாழ்வழுத்த நிலை கட்டணம் LT – FIXED CHARGES (LT III A (1) AND LT III B)

முந்தைய கட்டணம் / KW

0-12 KW (III A (1)

0-50 KW

50-112 KW

Rs.20/-

Rs.35/-

Rs.35/-

112-150KW

தற்போதுள்ள கட்டணம் /KW

Rs.72/-

Rs.77/-

Rs.153/-

தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படும் கட்டணம்

/ KW

Rs.20/-

Rs.35/-

Rs.350/- Rs.562/-

Rs.35/-

Rs.350/-

3.உயர் மின்னழுத்தக் கேட்பு கட்டணம் HT – MAXIMUM DEMAND CHARGES

உயர் மின்னழுத்தப் பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்புக்கட்டணம் தற்பொழுது வசூலிக்கப்படும் ரூ.562/ KVA, முந்தைய கட்டணம் ரூ.350 / KVA ஆகக் குறைக்கப்படவேண்டும்.

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

  1. பீக் ஹவர் (Peak Hour) கட்டணம் மற்றும் பீக் ஹவர் (Peak Hour) நேரம்

முந்தைய கட்டணம்

தற்போதுள்ள கட்டணம்

பீக் ஹவர் (Peak Hour) கட்டணம் (LT) இல்லை

8 hours- 15% கூடுதல்

பீக் ஹவர் (Peak Hour) கட்டணம் (HT) 20%

8 hours- 25% கூடுதல்

தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படும் கட்டணம்

பீக் ஹவர் (Peak Hour) கட்டணத்தை முற்றிலும் நீக்க வேண்டும்.

4 Hrs. Peak Hours 20%

5.வருடாந்திர மின் கட்டணம் அதிகரிப்பு

வருடாவருடம் 1% மின்கட்டண உயர்வு இருத்தல் வேண்டும்.

தமிழக அரசின் மின்சார உயர்வை கண்டித்து சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் வருகிற 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம்

  1. சோலார் நெட் வொர்க்கிங் கட்டணம் SOLAR NETWORKING CHARGES

Roof Top Solar Networking charges முற்றிலுமாக நீக்கப்படவேண்டும். Networking Charges என்பது மின் வாரியத்திற்கு ஆண்டிற்கு மிக குறைவாக கிடைக்கும் வருமானம் மட்டுமே. இந்த கட்டணமானது Roof Top சோலாரில் முதலீடு செய்து உபயோகிப்பவர்களுக்கு மிகவும் தடையாக இருப்பதால் சோலார் உபயோகிப்போர் இதில் முதலீடு செய்ய தயங்குகின்றனர். மேலும் நெட்மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்க வேண்டும்.

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்- வைகோ கண்டனம்

  1. 112–150 KW உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

மேற்கண்ட 7 கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக பரிசீலித்து தக்க நிவாரணம் அளிக்குமாறு தமிழ்நாடு தொழில் அமைப்புகளின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

MUST READ