Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டிகள் கடத்த முயற்சி!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டிகள் கடத்த முயற்சி!

-

 

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு தங்கக்கட்டிகள் கடத்த முயற்சி!
Video Crop Image

இலங்கையில் இருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்கு கடத்தி வர முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை’- அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!

இலங்கையின் தலைமன்னாரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு தங்கம் கடத்திச் செல்லவிருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே தலைமன்னார் கடற்கரையில் இலங்கையின் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உளுந்து வாய் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் தலைமன்னாரில் இருந்து ஃபைபர் படகு மூலம் தனுஷ்கோடிக்கு தங்கம் கடத்திச் செல்லவிருப்பது தெரிய வந்தது.

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதனையடுத்து, அப்பகுதியில் இருந்த ஃபைபர் படகை சோதனை செய்ததில் 2 கிலோ 150 கிராம் தங்கம் இருப்பதைக் கண்டறிந்து படகுடன் பறிமுதல் செய்தனர். கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேரை கைது செய்து, இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ