தந்தை பெரியாரின் 145- வது பிறந்தநாளான “சமூக நீதி நாளை” முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.17) வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
என்கவுன்ட்டர் செய்யப்படும் முன்பு காவல் நிலையத்தில் பேசிக் கொள்ளும் வீடியோ வெளியீடு!
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாபுமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளமான தி.மு.க.வினர் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்றனர். வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தி.மு.க.வின் பவள விழாவை முன்னிட்டு, தி.மு.க.வின் கட்சிக் கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.