
தி.மு.க. மகளிரணி மாநாட்டில் பங்கேற்க சென்னைக்கு வந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டில் பங்கேற்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்தனர்.
‘லியோ’ திரைப்படம்- முதல் காட்சியை காலை 09.00 மணிக்கே தொடங்க வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்!
அவர்களை தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, கலாநிதி வீராசாமி, அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.