கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற முருகனின் தலங்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை உள்ளிட்ட திருக்கோயில்களில் இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பழனி, திருச்செந்தூர் முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சிசிடிவி கேமராக்கள், டிரோன்களைக் கொண்டும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்ப, சக்திவேலைக் கொண்டு சிங்கமுகாசூரனின் தலையைக் கொய்து முருகன் வதம் செய்தார். இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக உலக பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம் விழாவைக் காண கடலோரத்தில் புடைச்சூழ, ஆணவம் கொண்ட சூரனை வேல் விட்டு வதம் செய்தார்.
பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 கால்கள் முறிந்தன!
சூரசம்ஹாரம் நிகழ்வைத் தொடர்ந்து, தமிழகத்தில் முருகன் கோயில்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு, நாளை (நவ.18) மாலை 04.00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.