அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் இன்று ஒரு நாள் பங்கேற்க தடை விதித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டப்பேரவையில் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதேபோல் இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் இன்று ஒரு நாள் பங்கேற்க தடை விதித்தார். சபாநாயகர் அறிவுரையை கேட்காமல் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.