டெங்கு காய்ச்சல் பரவல்- தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு முகாம்கள்
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அக்.1 முதல் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 40 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 36 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைத்து பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 280 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
இதேபோல் தேனி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால்,
டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க அக்.1 முதல் தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.