Homeசெய்திகள்தமிழ்நாடு15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்

-

- Advertisement -

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
File Photo

அர்ப்பணியாற்றியதற்காக காவல்துறை அதிகாரிகள் 4 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. ஏடிஜிபி வெங்கட்ராமன், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் ஆகியோருக்கு காவல்பதக்கம் விருது வழங்கப்படவுள்ளது. இதேபோல் காவல்துறை துணைத் தலைவர் ராஜேந்திரன், கூடுதல் துணை ஆணையர் ஷாஜிதா, டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்திக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு சிறப்புப் பணிகள் பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஏசி அனில்குமார், மதுரை டிஎஸ்பி சரவணன், சூலூர், பீளமேடு ஆய்வாளர்கள் மாதையன், அமுதாவுக்கு சுதந்திர தினத்தன்று பதக்கம் வழங்கப்பட இருக்கிறது. இதேபோல் மாசார்பட்டி, மானா மதுரை, அரியலூர், திருப்பூர் ஆய்வாளர்கள் அனிதா, விஜயா, மகாலட்சுமி, சித்ராதேவிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநரக காவல் ஆய்வாளர் மணிமேகலை, மறைந்த காவல் ஆய்வாளர் கு.சிவாவுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும் ரூ.25,000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது.

MUST READ