Homeசெய்திகள்தமிழ்நாடுநாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

-

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக ஆகஸ்ட் 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  நாகர்கோவில் – தாம்பரம் இடையே ஆகஸ்ட் 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இதேபோல் தாம்பரம் – நாகர்கோவில் இடையே ஆகஸ்ட் 19,26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 3.45 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முடிந்து சென்னை நோக்கிப் படையெடுத்த மக்கள்!
Video Crop Image

இதேபோல், திருநெல்வேலி -செங்கல்பட்டு இடையே ஆகஸ்ட் 13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நெல்லையிலிருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கத்தில் செங்கல்பட்டு – நெல்லை இடையே ஆகஸ்ட் 14, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், செங்கல்பட்டிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 5.50 மணிக்கு நெல்லையை சென்றடையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

MUST READ