Homeசெய்திகள்தமிழ்நாடுகடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு - தமிழ்நாடு அரசு

கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு – தமிழ்நாடு அரசு

-

கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு – தமிழ்நாடு அரசு
தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடத்தலை தடுக்க

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில் இதனை கண்காணிக்கு சிறப்பு தனிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது குறித்து இந்த குழு விசாரணை நடத்த உள்ளது.

கடத்தலை தடுக்ககடத்தலை தடுக்கதிருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில் மூன்று பேர் அடங்கி இந்த குழு இன்று தமிழ்நாடு கேரளா எல்லை பகுதியான புளியரையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கேரளாவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

MUST READ