தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை ஒரே நாளில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
‘அயோத்தி ராமர்கோயில்’- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
இலங்கை கடற்பரப்பில் சீன உளவுக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (அக்.27) எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகத் தலைமன்னார் அருகே இரண்டு படகுகளைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 16 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்திருப்பதோடு, மூன்று படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் அடுத்தடுத்து 37 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இதுவரை தமிழக மீனவர்கள் 64 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சுரேஷ் கோபி செயலுக்கு கடும் எதிர்ப்பு!
தமிழக மீனவர்களின் 10 படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.