ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களது 2 விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் சென்றிருந்தனர். இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விசாரணைக்காக இலங்கை அழைத்துச்சென்றனர். அங்கு விசாரணைக்கு பின்னர் 8 மீனவர்களையும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.