Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம்!

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம்!

-

 

ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம்!

உலகப்புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, கோயிலுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ராமானுஜர், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.

துபாயை ஆட்டம் போட வைக்க போகிறார் விஜய் ஆண்டனி!

முன்னதாக ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானைக்கு பழங்களை வழங்கி ஆசி பெற்ற பிரதமர், பாகனிடம் கலந்துரையாடினார். ஒவ்வொரு சன்னதி குறித்தும் அர்ச்சகர்கள் பிரதமருக்கு விளக்கினர். அதைத் தொடர்ந்து, கோயிலைச் சுற்றிப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, ரங்கநாதர் கோயில் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடும் கம்பராமாயணத்தை பிரதமர் கேட்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி, எஸ்பிஜி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது ஸ்ரீரங்கம் கோயில். ஸ்ரீ ரங்கம் கோயிலை சுற்றியிலும் ஐந்து அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமனின் குலதெய்வமான ஸ்ரீ ரங்கம் பெருமானை பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா, நயன்தாரா வழியில் அதிதி சங்கர்…. வெளியான புதிய தகவல்!

பிரதமரின் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என இந்து அறநிலையத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

MUST READ