திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி திடீரென உடைந்து விழுந்தது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!
உலக புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிசல் விட்டிருந்த பகுதி, திடீரென இடிந்து விழுந்ததால் மின் கம்பங்கள் சேதமடைந்தனர். கீழ வாசலில் உள்ள நுழைவுக் கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூச்சுகளும், அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு கோபுர வாசலைக் கடந்துச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கோயில் கோபுரங்களை ஆய்வுச் செய்து, பராமரிப்புப் பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!
கோபுரம் இடிந்து விழுந்த பகுதியில் போக்குவரத்துத் தடைச் செய்யப்பட்டுள்ளது. கோபுரங்களை ஆய்வு செய்துப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள், பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.