ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட மதுரவாயில், நொளம்பூர், அயப்பாக்கம், பகுதிகளில் தேர்தல் அலுவலக பணிமனைகள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உட்பட்ட அயப்பாக்கம் பகுதியில் தலைவர் கி.வீரமணி ஏற்பாட்டில் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் மா.சுபிரமணியன், 1980ஆம் ஆண்டு ஆந்திராவில் இருக்கக்கூடிய நந்தியாலா தொகுதியில் நரசிம்ம ராவ் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வரலாற்று சிறப்புமிக்க கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது அதேபோல் அண்ணன் டி ஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கடந்த காலத்தில் 5 லட்சம் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்று சாதனை முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என கூறி புகழாரம் சூட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி ஆர் பாலு, கூட்டத்தில் இருந்த தாய்மார்களிடம் உங்களை நீண்ட நேரம் காக்க வைக்க முடியாது ஏனென்றால் உங்கள் மாமாவிற்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் உணவு பரிமாற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தாலும் என்னை மகிழ்விப்பதற்காக காத்திருந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்து,நீங்களும் உங்கள் பிள்ளைகளும் குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, நான் தற்போது ஓட்டு கேட்க வரவில்லை எனக்காக காத்திருந்த உங்களை காணவே வந்தேன் உங்களைக் கண்டு பாராட்டவும் நன்றி தெரிவிக்கவும் வந்ததாக தெரிவித்தார்.