Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீரங்கம் தேரோட்டம்- மே 06- ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீரங்கம் தேரோட்டம்- மே 06- ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

-

 

ஸ்ரீரங்கம் தேரோட்டம்- மே 06- ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தையொட்டி, வரும் மே 06- ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

திருச்சியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வரும் மே 06- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

இந்த சூழலில், திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தையொட்டி, மே 06- ஆம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. திருச்சியில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மே 06- ஆம் தேதி விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில் மே 29- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும்; ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ