Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது

-

- Advertisement -

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயருகிறது

தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேறியது.

mkstalin

முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி பேரவையில் தாக்கல் செய்தார். 2001 ஆம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றிக்கை அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக செலவு அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்திருத்தத்தில்  நூறு ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும்  மாற்றியமைக்கப்படுகிறது.
இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் 500 ரூபாயும். நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியுவுடன் அமலுக்கு வரவுள்ளது.

MUST READ